நீங்கள் வானிலைக்கான வானொ லிகள் கேள்விப்படிருப்பீர்கள், தன் நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தன் மக்களை மீட்க நடத் தப்பட்டுவரும் வானொலி கூட கேள்விப் படிருப்பீர்கள் ஆனால் தன் நாட்டு உள வாளிகளுக்கு தகவல் தர நடத்தப்பட்டு வரும் சிற்றலை வானொலி பற்றி உங்க ளுக்கு தெரியுமா? உளவாளிகளுக்கான வானொ லியை ஆங்கிலத்தில் “Number Station” என்று அழைப்பார்கள், ஏனெ னில் இந்த வானொலி நிலையம் வெறும் எண்களை மட்டுமே தொடர்ச்சியாக ஒலிபரப்பிக்கொண்டிருக்கும். இந்த வானொலி நிலையங்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளோ, ஒலி பரப்பு முறைகளோ கிடையாது. உள வாளிகளுக்கான வானொலிக்கென்று ஒலிபரப்பு அட்டவணை கூட கிடை யாது, இந்த வானொலி எப்போது தனது ஒலிபரப்பை துவங்கும் எப்போது நிறைவு செய்யும், யார் அந்த ஒலி பரப்பை செய்கிறார்கள் போன்ற தகவல் கள் எதுவும் சம்பந்தப்பட்ட உளவாளி களுக்கும் அந்த ஒலிபரப்பை செய்யும் நபருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமா கும். இந்த எண் வானொலிகள் எந்த நாட்டிலிருந்து ஒலிபரப்பு செய்யப்படு கிறது என்ற தகவலும் ரகசியமே. எண் வானொலி நிலையங்களின் முதல் பயன்பாடு முதலாம் உலகப் போரின்போது, மோர்ஸ் குறியீட்டில் எண்கள் அனுப்பப்பதாக கூறப்பதுகி றது. இந்த வானொலி நிலையங்களின் தகவல் பரிமாற்றம் சங்கேத குறியீடு களாக இருக்கும், அந்த குறியீட்டை அனுப்பியவரும் அந்த குறியீடு யாருக்காக அனுப்பப்படுகிறதோ அவர் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். பொதுவாக இந்த வானொலி ஒலி பரப்பில் எண்களை ஒலிபரப்பு செய்யும் போது ஒன் டைம் பேட் என்ற கணித முறையை பயன்படுத்தி வார்த்தைகளை சங்கேத எண்களாக உருவாக்குவார் கள், இந்த சங்கேத குறியீட்டை அதே ஒன் டைம் பேட் முறையை பயன்படுத்தி அதன் உண்மையான வார்த்தைகளை உளவாளிகள் தெரிந்துகொள்வார்கள். எண் வானொலி நிலையங்கள் தற் போதய நவீன உலகில் ஒரு நன்மையை வழங்குகின்றன, யாருக்கும் தெரியா மல் தங்கள் தகவல்களை கமுக்கமாக அனுப்பலாம். ஏனெனனில் செய்தி யைப் பெறுபவர் உலகில் கிட்டத்தட்ட எங்கும் இருக்கக்கூடும், மேலும் தொலைபேசி வாயிலாகவோ அல்லது இணைய இணைப்பு மூலம் செய்திகளை பரிமாறினாள் நீங்கள் எதிராளியால் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் எண் வானொலி மூலம் தகவல்கள் அனுப் பப்படும் போது எந்தவித அச்சமுமின்றி அனுப்பலாம் மற்றும் பெறலாம். எண் வானொலி நிலைய பரிமாற்றங் கள் பெரும்பாலும் மற்ற நாட்டினரால் உளவாளிகள் கேட்க முடியாமல் செய்ய அதே அதிர்வெண்ணில் தங்க ளின் வேறேதேனும் ஒலிபரப்பை செய் வர். இப்படி இருந்தபோதும் பல எண் நிலையங்கள் தடையின்றி தங்கள் ஒலி பரப்பை செய்துகொண்டிருக்கின்றன என்பது ஆச்சர்யமானதாகவுள்ளது. இந்த ஒலிபரப்பில் எண்களை மனி தர்கள் பேசுவது கிடையாது. ஆனால் கணினியின் மூலம் ஒரு நாளைக்கு பல முறை மறுபடி மறுபடி கூறவைத்து ஒலிபரப்பு செய்கிறார்கள். இந்த உளவாளிகளுக்கான வானொலி ரஷ்யா, போலந்து, எகிப்து போன்ற நாடுகளிலிருந்து இயங்குவ தாக இனையத்தில் உள்ள பல்வேறு இணையதளங்களில் தகவல்கள் உள் ளன. ஆனால் அவை உண்மையான தக வல்கள் தானா என்பது உறுதி செய்வது கடினம். 1970களில் செயல்பட்டு வந்த எண் வானொலி நிலையங்களில் ஒன்று தான் “தி லிங்கன்ஷைர் போச்சர்”, இது ஹாம் வானொலி பயன்படுத்தும் பொறியா ளர்கள் மத்தியில் பிரசித்திபெற்று இருந்தது. இந்த வானொலி “தி லிங்கன் ஷைர் போச்சர்” என்ற நாட்டுப்புற பாடலை தன் அடையாள சமிக்ஞை யாகப் பயன்படுத்தியது. இந்த நிலை யத்தின் ஒலிபரப்பு தளம் சைப்ரஸின் அக்ரோதிரியில் உள்ள RAF ராணுவ தளம் அமெச்சூர் வானொலி ஆர்வலர் கள் திசை கண்டுபிடிக்கும் கருவி களைப் பயன்படுத்தி கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. பல அயல் நாட்டு அரசுகள் இன்றும் எண் வானொலி நிலையங்களின் மூலம் தங்கள் உளவாளிகளுக்கு தகவல் களை அனுப்புவதை பார்க்கும்போது இணைய மற்றும் பல்வேறு தொலை தொடர்பு தொழில்நுட்பங்கள் எவ்வ ளவு தான் வளர்ந்தாலும் இன்றும் சிற்றலை வானொலிக்கு மவுசு இருப் பது என்னை போன்ற சிற்றலை வானொலி கேட்போருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இது மட்டு மல்லாது இந்த மாதிரி வானொலிகள் வரும் காலங்களிலும் சிற்றலை வானொலியை அழியவிடாமல் பாதுகாக்கும் என்பதில் ஐயமில்லை.